இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் மெமரி கார்டுகளைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது என்றே எண்ணுகிறேன். இத்தகைய மெமரி கார்டுகள் இல்லாத எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களே இல்லை எனலாம்.

கேமராக்கள், கைப்பேசிகள், கேன்டிகேம் (handycam) உட்பட இன்று பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான மின்னணு நுகர்வோர் சாதனங்களில் இந்த சேமிப்பு அட்டை (Memory-cards) உள்ளன.

ஒரு மெமரி கார்டு வாங்கும்போது அதன் விலை மற்றும் திறனை அவசியம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஒரு சில மெமரி கார்டுகள் ஒரு குறிப்பிட்ட வகையை மட்டுமே ஆதரிக்கும் வகையில் உள்ளது.  இந்த மெமரி கார்டுகளின் வகைகளைப்பற்றியும், அதன் பயன்பாடுகளைப் பற்றியும் பார்க்கலாம்.
காம்பாக்ட் ஃபிளாஷ் (Compact Flash (CF)


scan_disck_2.0_memory_card

காம்பேக்ட்ஃப்ளாஷ் டிஜிட்டல் நினைவகம் பொதுவாக அனைத்து கேமரா வகைகளிலும் பயன்படுத்தபடுகிறது.  இது அதிக  டிஜிட்டல் கேமராக்கள் இணக்கத்தன்மையை கொண்டுள்ளது. காம்பேக்ட்ஃப்ளாஷ் இரண்டு வகைகளில் உள்ளன.  முதல் வகை  மெலிதானது. இரண்டாம் வகை சற்றே தடிமனானது.  இரண்டாம் வகை காம்பேக்ட்ஃப்ளாஷ் பொதுவாக 512MB அல்லது 1GB உயர் திறன் கொண்டது.

Fuji and Olympus SmartMedia Card

இவை ஜூலை 2002ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த வகை கார்டுகள் fuji மற்றும் Olympus என்பவர்கள் இருவரும் சேர்ந்து கண்டுபிடித்ததால் இதற்கு இப்பெயர் வந்தது. 

FujiFilm_smart_media_card

இந்த வகை மெமரி கார்டும் டிஜிட்டல் கேமராக்களில் உபயோகிக்கிறார்கள்  இது Olympus மற்றும் Fuji ஆகியோரால் கண்டுபிடிக்கபட்டது.

Secure Digital Card (SD card) & SDHC  memory கார்டுகள்:

இப்பொழுது இந்த வகை கார்டுகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. டிஜிட்டல் கேமராக்களில் பயன்படுத்தப்படுகின்றன. இது அனைத்துவிதமான கேமராக்களையும் ஆதரிப்பதால் எல்லவகையான கேமராக்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.  2007 -ம் வருடம் இத்தகைய மெமரிகார்டுகள் வெளியிடப்பட்டு விற்பனை வந்தது.


இது இரண்டாம் தலைமுறை மல்டிமீடியா கார்டு ஆகும். இதன் பிறகு SD mini என்ற கார்டும், Micro என்ற மெமரி கார்டுகளும் வெளியிடப்பட்டன. இது நவீன மொபைல்களில் பயன்படுத்தக்கூடியவனாக இருக்கிறது.

scan_disc_8GB_memory_care
scan_disk_4GB_memory_card


32GB_Micro_SD_hd_card
Memory Sticks:



sony_64gb_momory_stick

ony_memory_stick_pro

scan_disk_memory_stick_pro_duo

  (Symptoms of a Computer VIRUS)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhljvDHPi0xd2278VoCk2-0G6-71H3DFokhf_GBEw-8zDFKZcAn2CL7H33Scwjw1A0Lq_pCadRE1I_VIxdbG5vTHqLfPNhYTFZ0Kj0L8fE6lujUKkgXm_SIrFsrHNMUkxqL0HWfN5tSP2d5/s1600/computer-virus.jpg
 
உங்கள் கணிப்பொறியில் நச்சு நிரல்களால்(Virus) பாதிக்கபட்டிருந்தால் கீழ்க்கண்ட பிரச்னைகள் ஏற்படலாம்.

கணிப்பொறியின் வேகம் குறைந்து காணப்படும்.(very slow on computer speed).
 
கணிப்பொறி அடிக்கடி செயலிழந்து போகும். (computer failure ).
 
கணிப்பொறி சரிவர செயல்படாததுடன் அடிக்கடி தானாகவே மீண்டும் இயங்கும். (Automatic Restart).
 
கணிப்பொறியில் இருக்கும் பயன்பாடுகள்(computer applications) சரிவர இயங்காது வட்டுகளையும், வட்டு இயக்கிகளையும் பயன்படுத்த முடியாது.(Disks, disk drives will not be able to use.)
 
அச்சிட வேண்டிய ஆவணங்களை சரியாக அச்சிட முடியாது. (Cannot print documents correctly.)
 
அடிக்கடி தேவையில்லாத பிழைச் செய்திகள்(Error Message) தோன்றும்.அண்மையில் திறந்த ஆவணங்களுக்கு இரண்டிரண்டு விரிவுகள் (Double extension)தோன்றலாம். 
 
எந்த ஒரு காரணமும் இன்றி நச்சு நிரல் எதிர்ப்பி(Anti virus software) செயல் இழந்துவிடும். அதை மீண்டும் இயக்குவது கடினமாக இருக்கும். 
 
நீங்கள் தோற்றுவிக்காத புதிய பணிக்குறிகள்(Short Cuts) திரைமுகப்பில் காணப்படும். தேவையில்லாமல் வினோதமான ஒலிகள் கேட்கும். 
 
உங்கள் கணிப்பொறியிலுள்ள முக்கியமான நிரல்கள் உங்களுக்குத் தெரியாமலேயே நீக்கப்பட்டிருக்கும்.(Important files are removed without your permission).
 
எந்தவொரு காரணமும் இன்றி கணிப்பொறியின் நினைவகம் குறைந்து போகும். (The computer's memory Reduced without any reason ).
 
வினோதமான செய்திகள் திரையில் தோன்றும்.(Strange news appear on screen).
 
வினோதமான கோப்புகள் கோப்புறைகளில் காணப்படும்.(Strange files are in folders).
 
உங்களுடைய கோப்புகளில் சில உங்களுக்குத் தெரியாமலேயே நகலெடுக்கப்பட்டிருக்கும். (Unbeknownst to you, some of your files will be copied.).
 
மேற்கண்ட அறிகுறிகள் உங்களுடைய கணினியில் இருக்குமானால் நிச்சயம் உங்கள் கணினி வைரசால் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள். நன்றி..!!!

கம்ப்யூட்டர் திரையை "டிவி"யில் காண......

டிஜிட்டல் சாதனங்களை இணைத்துச் செயல்படுத்துவது இப்போது பரவலாகப் பரவி வருகிறது. டிவி மூலம் இன்டர்நெட் இணைப்பு ஏற்படுத்திப் பார்ப்பது, கம்ப்யூட்டர்களில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளில் சிலவற்றை மேற்கொள்வதும் தொடங்கிப் பரவி வருகிறது.

இவர்களின் சந்தேகம் அனைத்தும் எவ்வகை கம்ப்யூட்டர், எந்த வகை டிவிக்களுடன் இணைக்கலாம் என்பதில் தொடங்கி, அதற்கான கேபிள்கள் எப்படி பெறலாம் என்பதுதான். அவற்றைச் சற்று விரிவாக இங்கு காணலாம்.
கம்ப்யூட்டருடன் எல்.சி.டி., எல்.இ.டி. மற்றும் பழைய வகை சி.ஆர்.டி. ட்யூப் கொண்ட டிவிக்களுடன் இணைக்கலாம். இந்த டிவிக்களில் இவற்றை இணைப்பதற்கான தொழில் நுட்பமும், அதற்கான போர்ட்களும் இருக்க வேண்டும். பொதுவாக வண்ணத் திரை கொண்ட டிவிக்களில் இணைக்கலாம். ஆனால் போர்ட் வசதி இருக்க வேண்டும். அந்த போர்ட்கள் எவை எனக் காணலாம்.

 
1.எச்.டி.எம்.ஐ. (HDMI):

புதிதாய் வரும் சி.ஆர்.டி. டிவிக்களில், இந்த HDMI போர்ட் தரப்படுகிறது. இதன் வழியாக, அதற்கான சரியான கேபிள்களை வாங்கி, டிவியுடன் இணைக்கலாம். கம்ப்யூட்டரிலும் இந்த போர்ட் இருக்க வேண்டும். டிவி ரிமோட் அல்லது டிவியில், HDMI இன்புட் சேனலைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம்.


2. டி.வி.ஐ. (DVI):

இதற்கான அடுத்த பெஸ்ட் கனக்ஷன் வகை DVI ஆகும். இதன் மூலம் இணைக்கப்படும்போதும், நல்ல டிஜிட்டல் இமேஜ் கிடைக்கும். இது பொதுவாக, பெர்சனல் கம்ப்யூட்டரில் காணப்படும். டி.வி.ஐ. கேபிள் ஒன்றின் மூலம் இரண்டையும் இணைக்கலாம். டிவியில் இந்த போர்ட் இல்லாமல் HDMI மட்டும் உள்ளது என்றால், DVI to HDMI கன்வர்டர் கேபிள் ஒன்றைப் பயன்படுத்தலாம்.


3. வி.ஜி.ஏ. (VGA):

இப்போது வரும் சி.ஆர்.டி. டெலிவிஷன்களிலும், மற்றும் அனைத்து வகைக் கம்ப்யூட்டர்களிலும், பொதுவாகத் தரப்படும் இணைப்பு வகை இது. அதே போல, விஜிஏ கேபிள்களும் குறைந்த விலையில் எளிதாகக் கிடைக்கும். ஒரு முனையை கம்ப்யூட்டரிலும், இன்னொன்றை டிவியிலும், ஜஸ்ட் லைக் தட் இணைத்துப் பார்க்கலாம். டிவி அல்லது ரிமோட்டில் அதற்கான சேனல் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதனை மறக்க வேண்டாம்.


4. எஸ்-வீடியோ (Svideo):

இதனை இறுதித் தேர்வாகவே வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இதன் மூலம் கிடைக்கும் காட்சி அவ்வளவு சிறப்பாக இருக்காது. பொதுவாக இந்த வகை இணைப்பு சி.ஆர்.டி. டெலிவிஷன் மற்றும் கம்ப்யூட்டர் களில் கிடைக்கும். கம்ப்யூட்டரில் உள்ள எஸ்-வீடியோ போர்ட்டில் கேபிளின் ஒரு முனையை இணைத்து, மற்றொரு முனையை வீடியோ இன் என்று இருக்கும் மஞ்சள் நிற இன்புட் சாக்கெட்டில் இணைக்க வேண்டும். பின்னர், இதற்கான சரியான சேனலை, டிவியில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஒரு சின்ன விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். DVI, VGA அல்லது SVideo என்ற வகையில் இணைப்பினை ஏற்படுத்துகையில், படங்கள் மட்டுமே டிவியில் கிடைக்கும். ஒலி உங்கள் கம்ப்யூட்டர் ஸ்பீக்கரில் கிடைக்கும் ஒலி மட்டுமே இருக்கும். ஏனென்றால் இந்த கேபிள்கள், இமேஜ் மட்டுமே கடத்திச் செல்லும்.
ஆனால் HDMI கேபிள் இணைப்பில், இந்த குறை இல்லை. டிவியில், ஒலி வேண்டும் என்றால், தனியே, 3.5 மிமீ மினி ஸ்டீரியோ மேல் ஜாக் ஒரு புறமும், ஆர்.சி.ஏ. மேல் கேபிள் இன்னொரு புறமும் கொண்ட தனி கேபிள் கொண்டு இணைக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் இவை தேவைப்படும் நீளத்தில் கிடைக்கின்றன.
இவ்வாறு இணைத்த பின்னர், சில லேப்டாப்களில், கட்டளை வழியாக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பொதுவாக, அனைத்து லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும் இந்த கட்டளை Fn + F8 கீகளை அழுத்தி அமைப்பதாகவே இருக்கும். இல்லை எனில், குறிப்பிட்ட லேப்டாப்பின் மேனுவலைப் பார்த்து அறிந்து கொள்ளவும். அதே போல, கம்ப்யூட்டரின் ரெசல்யூசனையும் மாற்ற வேண்டியதிருக்கலாம்.

Unmovable Files என்றால் என்ன? 

 

இயங்கு தளத்தினால் தற்போது பயன் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பைல்களை அழிக்கவோ அல்லது இடமாற்றம் செய்யவோ முடியாது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அவ்வாறான பைல்களையே (Unmovable Files) அன்மூவபல் பைல்கள் எனப்படுகின்றன.பேஜ் (Page file) பைல் மற்றும் MFT பைல்கள் (Master File Table) என்பவற்றை இடமாற்றம் செய்ய முடியாத பைல்களுக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

பிரதான நினைவகமான RAM இல் வெற்றிடம் போதுமான அளவு இல்லாத போது ஹாட் டிஸ்கில் அதற்கென ஒரு குறிப்பிட்ட பகுதி ஒதுக்கப்பட்டு ஹாட் டிஸ்கும் நினைவகமாகச் செயற்படும் இதனையே பேஜ் பைல் / ஸ்வொப் பைல் (Swap file) அல்லது வேர்ச்சுவல் மெமரி (Virtual Memory) எனப்படுவது


அதேபோல் ஹாட் டிஸ்கிலுள்ள ஒவ்வொரு பைல் பற்றிய விவரங்களையும் கொண்டிருக்கும் ஒரு அட்டவணையே Master File Table (MFT) எனப்படுகிறது. இது ஹாட் டிஸ்கில் நிரந்தரமாக ஓரிடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்.இந்த MFT பைல் மற்றும் பேஜ் பைல்கள் இடமாற்றம் செய்ய முடியாத பைல்களாக விண்டோஸில் அடையாளமிடப்படுகின்றன.


ஹாட் டிஸ்கில் பைல் சேமிக்கப்படும்போது, இயங்கு தளம் எங்கெல்லாம் வெற்றிடம் காணப்படுமோ அவ்விடங்களில் புதிய பைல்களை சேமித்து விடும். ஹாட் டிஸ்கின் வெற்றிடத்தைப் பொறுத்தும் பைலின் அளவு பெரிதாக இருக்கும் பட்சத்திலும் அந்த பைல் முழுமையாக அல்லாமல் சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சிதறலாக சேமிக்கப்படும்.


இதனையே ப்ரேக்மண்ட்ஸ் (Fragments) எனப்படுகிறது. இந்த பைல் பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கணினியின் வேகத்தில்  மந்த நிலை ஏற்படலாம் அல்லது சில வேளை பைல்களை இழக்கவும் நேரிடலாம்.


ஹாட் டிஸ்கை ஒரு குறித்த் கால இடைவெளிகளில் டிப்ரேக்மண்ட் செய்து கொள்வதன் மூலம் இவ்வாறான பாதிப்புகளிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம். ஹாட் டிஸ்கை டிப்ரேக்மண்ட் செய்வதற்கென Disk Defragmenter எனும் யூட்டிலிட்டி விண்டோஸுடன் இணைந்து வருகிறது.


டிப்ரேக்மண்ட் செய்யும்போது அங்கொன்று இங்கொன்றாக சிதறிக் கிடக்கும் ஒரு பைலின் பகுதிகள் அருகருகே தொடர்ச்சியாக அமையும் வண்ண்ம் இடமாற்றம் செய்யப்படுகின்றன.


டிப்ரேக்மண்ட் செய்யும்போது, டிப்ரேக்மண்ட் விண்டோ டிஸ்க் மேப்பில் (Disk Map) பச்சை நிறத்தில்
சில பகுதிகளைக் காண்பிப்பதை நீங்கள் அவதானித்திருக்கலாம். இடமாற்றம் செய்ய முடியாத் பைல்கள் உள்ள இடங்களையே விண்டோஸில் இவ்வாறு காண்பிக்கப்படுகிறது.. ஏனைய பகுதிகளை டிப்ரேக்மண்ட் செய்த பிறகும் இந்த அன்மூவபல் பைல்கள் ஹாட் டிஸ்கில் முன்னர் இருந்த இடத்திலேயே சிதறலாகக் இருக்கும்.


பேஜ் பைல் அலல்து ஸ்வொப் பைல்களை டிப்ரேக்மண்ட் செய்ய முடியாது என்பதால் அவற்றை அழித்து விட்டு டிப்ரேக்மண்ட் செய்யலாம். எனினும் அவற்றை வழமையான முறையில் அழிக்கவும் முடியாது. அவற்றை அழிப்பதற்குப் விண்டோஸில் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள்.


Control Panel >>>>System>>> Advanced tab>>>> Performance Settings>>> Advanced tab Change தெரிவு செய்யுங்கள். அங்கு Virtual Memory என்பதன் கீழ் No paging file தெரிவு செய்து Set என்பதைக் க்ளிக் செய்யுங்கள். பின்னர் கணினியை மறுபடி இயக்கி டிப்ரேக்மண்ட் செயற்பாட்டை ஆரம்பிக்கலாம்.


டிப்ரேக்மண்ட் செய்த பிறகு மேற்சொன்னவாறு Virtual Memory எனுமிடத்திற்குப் பிரவேசித்து Custom size என்பதைத் தெரிவு செய்து Initial size மற்றும் Maximum size எனுமிடங்களில் ஒரே அளவான ஹாட் டிஸ்கில் இடத்தை ஒதுக்குங்கள். இந்த அளவானது, கணினியின் பிரதான நினைவகத்தின் இரண்டு முதல் நான்கு மடங்காக இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.


ஹாட் டிஸ்கிலுள்ள் மற்றுமொரு இடமாற்றம் செய்ய முடியாத் பைல் வகையான MFT எனும் பைல் அட்டவணையாகும்.. ஹாட் டிஸ்கில் பைல்களின் அளவு அதிகரிக்கும்போது இந்த MFT யின் அளவும் அதிகரிக்கிறது. இந்த MFT பைலும் அதன் உச்ச அளவைத் தாண்டும் போது சிறு சிறு பகுதிகளாக்கப்படுகிறது.


ரெஜிஸ்ட்ரியில் சிறிய மாற்றததைச் செய்வதன் மூலம் MFT பைலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள் இடத்தை மேலும் அதிகரித்துக் கொள்ளலாம். அதற்கு நீங்கள் Start → Run → regedit ஊடாக ரெஜிஸ்ட்ரி எடிட்டரைத் (Registry Editor) திறந்து HKEY_LOCAL_MACHINE\SYSTEM\ CurrentControlSet\Control\Filesystem வரை பயணித்து NtfsMftZoneReservation என்பதை டபள் க்ளிக் செய்து அதன் வலது புறம் 2 முதல் 4 வரையிலான ஒரு இலக்கத்தை உள்ளீடு செய்யுங்கள்.


இரண்டை டைப் செய்வதன் மூலம் 25 வீதத்தையும் 3 ஐ டைப் செய்வதன் மூலம் 37.5 வீதத்தையும் 4 ஐ உள்ளீடு செய்வதன் மூலம் 50 வீதத்தையும் ஹாட் டிஸ்கில் ஒதுக்கலாம்.

 

About this blog

Blog Archive