கணணி வைரஸ்களும் அவற்றுக்கான தீர்வுகளும்
1.
Boot Sector Viruses:-
அதாவது, பூட் செக்டார் வைரஸ்
என்பது, நமது கணினியின் BIOS என சொல்லப்படும் "அடிப்படை உள்ளீட்டு அல்லது
வெளியீட்டு முறை" எனும் சிஸ்டம் மீது தான் தாக்குகின்றன. பொதுவாக வைரஸ்
வந்ததை உணர்ந்தால் உடனே இயங்குதள நிறுவி குறுந்தகட்டை தேடி எடுத்து, மறு
நிறுவல் செய்து விடுவோம். அப்படி எல்லாம் செய்தால் இந்த பூட் செக்டார்
வைரஸை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது. நீங்கள் புதியதாக ஒரு HDD வாங்கி
வந்து வைத்தாலும் சரி, அதுவும் பாதிக்கப்படும். காரணம் இது தாக்குவது
பாதிப்பது எல்லாம் MBR (MBR என்றால் Master Boot Record ஆகும். இது
இயங்குதளத்தை கண்டுபிடித்து இயங்க வகை செய்யும்) எனும் தகவலைச்
சேமித்துவைத்திருக்கும் BIOS-இன் பகுதியைத் தான். அதனால் BIOS ரெகவரி
டிஸ்க் ஒன்று உருவாக்கி BIOS-ஐ மீள்-நிறுவல் செய்து, HDD-இனையும் அழித்து,
இயங்குதளம் மீள்-நிறுவல் செய்து தான் கணினியைக் காப்பாற்ற முடியும்.
2.
கூடாத நிரல் அல்லது கோப்புகள்:-
இந்த வகை வைரஸ்கள்,
நிரல்களாகவோ அல்லது கோப்பாகவோ ஹார்ட் டிஸ்கில் இயங்குதளத்தின்
பார்ட்டீசனில் உட்கார்ந்துக் கொள்ளும். இவை, இயங்குதளம் தொடங்கும் போதே,
தானும் தொடங்கி தன் கூடாத செய்கையினால் கணினியை பாதிப்புக்குள்ளாக்கும்.
அந்த நிரல்/கோப்பு எதுவென்று தெரிந்தாலே, Task Manager கொண்டு
நிறுத்திவிடலாம். பின்னர், அழித்தும் விடலாம்.
3. Stealthy
Virus:
இவையும் இரண்டாவதாக சொல்லப்பட்ட வைரஸ் போலத் தான்.
ஆனால், இந்த வகை வைரஸ்கள் தனது அடையாளத்தைக் காட்டிக் கொள்வதே இல்லை.
இதனால், இதனைக் கண்டுபிடித்து முடக்க/அழிக்க மிகவும் கடினமானதும் கூட.
Anti-Virus இருக்கிறதே என தப்புக் கணக்குப் போடாதீர். வேட்டியாடும்
Anti-Virus-களிடம் தான் இதன் விளையாட்டே. நீங்கள் வைரஸ் ஸ்கேன் செய்யத்
தொடங்கியவுடன் தனது கோப்பிற்கு, ஒரு நல்ல நிரல் என்ற பிம்பத்தை
உருவாக்கிவிட்டுத் தானே தற்காலிகமாக முடங்கிக்கொள்ளும். இதனால்,
Anti-virus-களிடம் இது அகப்படாது தப்பித்துவிடும்.
4.
MultiPartite:-
இந்த வகை வைரஸ்கள் மேலே சொல்லப்பட்ட மூன்று
வகையிலும் சார்ந்தவை. இதனால், இது பாதிக்காத இடமே கணினியில் இருக்காது.
இவ்வாறான வைரஸ்கள் பெரும்பாலும் தாக்குவது குறைவாக இருந்தாலும்,
தாக்கப்பட்டால் பெரும்பாதிப்பு உண்டாகும்.
5. Polymorphic:-
போலிமோர்பிக் வைரஸ்கள், தங்களைத் தாங்களே திருத்தி எழுதிக்கொள்ளும் வல்லமைக் கொண்டவை.
இதனால் வைரஸ் ஸ்கேன் செய்யும் போது தன்னை ஒரு ஸ்பைவேராகவும், ஸ்பைவேருக்கு
ஸ்கேன் செய்யும் போது தன்னை ஒரு வைரஸாகவும் மாற்றிக் கொண்டு பாதிப்பை
உண்டாக்கிய வண்ணம் இருக்கும்.
6. Macro:-
மக்ரோ என்பது, சொல் திருத்திகளில் அடிக்கடி செய்ய வேண்டி இருக்கும் ஒரு பணியை
தானே செய்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்படும் நிரலாக்கம் தான். அதையே
தீங்கிழைக்கும் ஒரு பணியை இயக்க நிரலாக்கப் படுவது தான் மக்ரோ வகை
வைரஸ்கள். பெரும்பாலும், நமது மின்னஞ்சல் முகவரியில் இருந்து எல்லோருக்கும்
மெயில் அனுப்புவது போன்ற சிறு சிறு தொந்தரவு தரும்.
பயர்வோல் என்றால் என்ன ?
பயர்வால் என்பது நமது local networkகிற்கும் internetகிற்கும் இடையே உள்ள
ஒரு மென் பொருள் ஆகும்.இது ட்ரோஜன்ஸ் ,ஹேக்கர்ஸ் போன்ற பொதுவான இன்டர்நெட் தாக்குதலை தவிர்க்கப் பயன் படுகின்ற்து.நமது லோக்கல் நெட்வொர்க்கிர்க்குல் தடைசெய்யப்பட்ட வெப் சைட்கள் உள் வருவதை தவிர்க்கிரது.எனினும் இது போதுமான் பாதுகாப்பை தரவல்லதல்ல.
சில மேன்மை வாய்ந்த பயர்வால் சாப்ட்வேர்களும் உள்ளன.. நவீன routers எல்லாவற்றிலும் உள்ளினைந்த பயர்வால்கள் உள்ளன. எனினும் பெரும்பாலும் அவை பொதுவான அடிப்படை தாக்குதலிருந்து தடுக்கவே
ஒரு மென் பொருள் ஆகும்.இது ட்ரோஜன்ஸ் ,ஹேக்கர்ஸ் போன்ற பொதுவான இன்டர்நெட் தாக்குதலை தவிர்க்கப் பயன் படுகின்ற்து.நமது லோக்கல் நெட்வொர்க்கிர்க்குல் தடைசெய்யப்பட்ட வெப் சைட்கள் உள் வருவதை தவிர்க்கிரது.எனினும் இது போதுமான் பாதுகாப்பை தரவல்லதல்ல.
சில மேன்மை வாய்ந்த பயர்வால் சாப்ட்வேர்களும் உள்ளன.. நவீன routers எல்லாவற்றிலும் உள்ளினைந்த பயர்வால்கள் உள்ளன. எனினும் பெரும்பாலும் அவை பொதுவான அடிப்படை தாக்குதலிருந்து தடுக்கவே
இவை பயன்படுகிறது.
பொதுவான அண்டி வைரஸ் ப்ரோக்ராம்கள்
1. பிட் டிபன்டர் (BitDefender):-
பிட் டிபன்டர் ஆண்ட்டி வைரஸ்
புரோகிராம், விண்டோஸ் மட்டுமின்றி லினக்ஸ் சிஸ்டங்களிலும் இயங்கி
செயல்புரிகிறது. அத்துடன் மெயில் சர்வர்கள், டெஸ்க்டாப்
கம்ப்யூட்டர்களிலும் வைரஸ் எதிர்ப்பு பணியை மேற்கொள்கிறது.
2. அவிரா ஆண்ட்டிவிர் (Avira Antivir):
இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்,
மற்ற புரோகிராம்கள் கண்டுபிடிக்காத சில வைரஸ்களைக் கண்டறிந்து, அவற்றை
நீக்கும் வழிகளைத் தருகிறது. அதே போல மற்றவற்றைக் காட்டிலும், கூடுதல்
வேகத்தில் இது செயல்படும்.
3. கிளாம் ஏவி (Clam AV):
இது லினக்ஸ் இயக்கத்தில் செயல்படும்
சர்வர்களுக்கென வடிவமைக்கப்பட்டது. அத்தகைய சர்வர்கள் வைத்திருப்போர்
கட்டாயம் இதனை இன்ஸ்டால் செய்து வைத்திருக்க வேண்டும்.
4.அவாஸ்ட் (Avast):
மற்ற ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைப் போல இது பெயர்
பெற்றது இல்லை . ஆனால் இந்த புரோகிராம் தருவது போல பல ஆப்ஷன்களை மற்ற
புரோகிராம்கள் தருவது இல்லை.
5. ஆர் கே ஹண்டர் (rk hunter) :
இதன் சிறப்பு இது ஒரு ரூட்கிட்
எதிர்ப்பு டூலாகும். நம்மில் பெரும்பாலானவர்கள் ரூட்கிட் நமக்கு தரக்கூடிய
பாதிப்புகளை அறிந்திருப்பது இல்லை. மேக் கம்ப்யூட்டர்களில் பெரும்பாலும்
இது சேதத்தை விளைவிக்கும். உங்களிடம் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்
ரூட்கிட்களுக்கு எதிரான பாதுகாப்பினை வழங்கவில்லை என்றால்,இதனை உடனே
நிறுவுவது அவசியம்.
6. டாக்டர் வெப் க்யூர்இட் (Dr.Web CureIt):
இந்த ஆண்ட்டி வைரஸ்
புரோகிராமினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இது ஒரு சிறிய பைனரி பைல்.
இதன் மீது டபுள் கிளிக் செய்தால், அது நம் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடும்.
இதில் ஒரே ஒரு பிரச்னை உள்ளது. இதன் அண்மைக் காலத்திய மேம்படுத்தப்பட்ட
புரோகிராமினை அப்படியே அப்டேட் செய்திட முடியாது. மீண்டும் புதிதாக
டவுண்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். இதனை போர்ட்டபிள் வைரஸ் ஸ்கேனராகப்
பயன்படுத்தலாம்.
7. இ செட் ஸ்மார்ட் செக்யூரிட்டி (ESET Smart Security):
NOD32 என்னும்
ஆண்ட்டி வைரஸ் டூலைத் தந்தவர்களே இதனையும் தந்துள்ளனர். இது ஆண்ட்டி வைரஸ்
மற்றும் பயர்வால் புரோகிராம்களாகச் செயல்படுகிறது. இதன் பயர்வால் செயல்பாடு
சற்று விசித்திரமானது. இது இருக்கும் கம்ப்யூட்டரில் இன்டர்நெட் எப்படி
பயன்படுத்தப்படுகிறது என்பதை, நம்மிடமிருந்து கற்றுக் கொண்டு, அதற்கேற்ற
வகையில் செயல்படுகிறது. டேட்டா திருடு போகாமலும், நம் ஆண்ட்டி வைரஸ்
புரோகிராம்களின் செயல்பாட்டை முடக்கும் வைரஸ்களை இயங்கவிடாமலும் இது
தடுக்கிறது.
8. AVG Anti-Virus Free
இலவசமாக தரவிறக்கக்கூடிய AVG ஆனது Virus ,Spyware என்பவற்றில் இருந்து
windows இனை பாதுகாப்பதோடு இதன் AVG Social Networking Protection சமூக
வலைத்தளங்களில் பாதுகாப்பு வழங்கும்.
9 .Avira AntiVir Personal – Free Anti virus
இது உங்கள் கணணியை மோசமான விளைவுகளை ஏற்படுத்த வல்ல viruses, worms,
Trojans and costly dialers என்பவற்றில் இருந்தது பாதுகாக்க வல்ல ஒரு இலவச
மென்பொருள் ஆகும்.
10 .Ad-Aware Free Internet Security
இந்த கணணி பாதுகாப்பு மென்பொருள் real-time protection, advanced Genocode
detection technology, rootkit protection, automatic updates, என பல
சிறப்பியல்புகளை கொண்டுள்ள பயன் மிக்க ஒன்று.
11 .CCleaner
விண்டோஸ் பக் இல் உள்ள வைரஸ் போன்றவற்றை துப்பரவு செய்து வேகம்
உள்ள கணணியாக பேணுவதுடன் உங்கள் தனிபட்ட கோப்பு திருட்டுக்களிருந்தும்
பாதுகாக்கிறது.
12. பெஸ்ட் சைட் அட்வைசர் McAfee SiteAdvisoR
வருமுன் காப்போம் என்ற பழமொழிக்கு ஏற்ற சிறந்த சாப்ட்வேர் இது
ஸ்பைவேர் ,வைரஸ் உள்ள சைட் நீங்க சென்றால் இந்த சைட் அட்வைசர் சிகப்பு குறி
இட்டு திறக்க விடாது
உங்கள் கணினியை வைரஸ் வரமால் இருக்கு தடுக்க சிறந்த சைட் அட்வைசர் இது.
உங்கள் கணினியை வைரஸ் வரமால் இருக்கு தடுக்க சிறந்த சைட் அட்வைசர் இது.
0 comments:
Post a Comment