வின்டோஸ் எக்ஸ்பீ


உலகில் மிக அதிக தடவை பார்க்கப்பட்ட புகைப்படமாக இது வரை லியானார்டோ டாவின்ஸி வரைந்த மோனா லிசா ஓவியம் இருந்து வந்தது.

ஆனால் சமீபத்தில் நடத்தப் பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் 2002 ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தப் பட்ட வின்டோஸ் எக்ஸ்பீ இயங்கு தளத்தின் டீ ஃபால்ட் முகப்பு வோல் பேப்பர் படமான 'பிளிஸ்' (Bliss) இச்சாதனையை முறியடித்து உலகில் அதிக தடவை பார்க்கப் பட்ட படமாக மாறியுள்ளது.

இப்படம் 'சார்லெஸ் ஓ ரியர்' எனும் முன்னாள் நேஷனல் ஜியோகிராஃபிக் சேனலின் ஊழியரால் கலிபோர்னியாவின் நாப்பா நீர்வீழ்ச்சிக்கு அருகில் எடுக்கப் பட்டதாகும். இப்படத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் என்ன விலை கொடுத்து வாங்கியது என இவர் தெரிவிக்க மறுத்து விட்டார்.

பிரபலமான போட்டோ ப்ளாக் ஒன்றில் வெளியான தகவலின் படி வின்டோஸ் எக்ஸ்பீயின் தீம் படமான பச்சை நிற புல்வெளி மற்றும் நீல வானம் வெள்ளை முகில்கள் அடங்கிய இந்த 'பிளிஸ்' வோல் பேப்பர் சுமார் ஒரு பில்லியன் பாவனையாளர்களின் கணனி முகப்பை அலங்கரித்துக் கொண்டு நாளாந்தம் பார்க்கப் பட்டு வருவதாக கூறப் பட்டுள்ளது.

முழு அளவு காட்டு