cab file: உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் இயக்கத்தில் ஏதேனும் புரோகிராம்ஒன்றை, எடுத்துக் காட்டாக வேர்ட் புரோகிராம், இன்ஸ்டால் செய்தால்விண்டோஸ் அந்த புரோகிராமினைப் படித்துத் தெரிந்து கொண்டு அதனைகேபினட் பைல் ஒன்றில் பதிந்து வைக்கும். அந்த வகை பைலின் துணைப் பெயர்தான் இது. இந்த பைலை நாம் படித்து அறிய வேண்டியது இல்லை. எனவேஇதனைத் திறக்காமல் இருப்பதே நல்லது.
bmp: மிக எளிமையான கிராபிக்ஸ் பைல். இதனை பிட்மேப் பைல் என்றும்அழைப்பார்கள். விண்டோஸ் பெயிண்ட் உட்பட எந்த இமேஜ் புரோகிராம்மூலமும் இதனைத் திறக்கலாம்.
vbs: இதனைப் பற்றி நீங்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். மைக்ரோசாப்ட்நிறுவனம் உருவாக்கியவிசுவல் பேசிக் என்னும் புரோகிராமிங் மொழி மூலம்புரோகிராமர்கள் விண்டோஸில் இயங்கும் பல அப்ளிகேஷன்களைவடிவமைக்கின்றனர். அந்த பைல்களின் துணைப் பெயர் இவ்வாறு இருக்கும். இதில் டபுள் கிளிக் செய்தால் அந்த பைல் இயங்கும். ஆனால் வைரஸ் பைல்களைஎழுதுவோர் இந்த துணைப் பெயரைப் பயன்படுத்தி தங்கள் வைரஸ்புரோகிராம்களை உருவாக்குகின்றனர். எனவே இந்த துணைப் பெயருடன்உங்கள் இமெயிலில் ஏதேனும் அட்டாச்டு பைல் வந்தால் கவனமாக அதனைஏதேனும் ஆண்டி வைரஸ் புரோகிராம் கொண்டு சோதித்துப் பின் திறக்கவும்.
exe: எக்ஸிகியூட்டபிள் பைல் என்பதன் சுருக்கம். இதில் ஒரு புரோகிராம்இருக்கும். இதனை இருமுறை கிளிக் செய்தால் அந்த புரோகிராம் விரித்துஇயங்கும்.
bat: பேட்ச் பைல் என்பதன் சுருக்கம். இந்த பைலில் வரிசையாக பல கட்டளைகள்தரப்பட்டிருக்கும். இதன் மீது டபுள் கிளிக் செய்திடுகையில் அந்த கட்டளைகள்ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். இந்த பைலை நோட்பேடில் உருவாக்கலாம்மற்றும் எடிட் செய்திடலாம்.
0 comments:
Post a Comment